பட்டுக்கோட்டை அருகே உள்ள தம்பிக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள வராகி அம்மன் திருக்கோவில் இன்று பஞ்சமியை முன்னிட்டு ஆரஞ்சு பழம் அலங்காரத்தில் வராகி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் வராகி அம்மனை மனம் உருகி வழிபட்டனர். பஞ்சமி வழிபாட்டில் கலந்துகொண்ட அனைத்து பக்தர்களுக்கும் சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.