பட்டுக்கோட்டை: அரசு மருத்துவமனைக்கு வாகனங்கள் வழங்கல்

58பார்த்தது
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில், நண்பர்கள் அறக்கட்டளை சார்பில், அவசரகால பேரிடர் மருத்துவ இலவச வாகனங்கள் இரண்டு ஆம்புலன்ஸ் மற்றும் மூன்று கார்கள் என 5 வாகனங்கள் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஜெயஸ்ரீ மற்றும் வட்டாட்சியர் சுகுமார் ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்நிகழ்வில் நண்பர்கள் அறக்கட்டளை நிர்வாகிகள் அஜித், பகுருதீன், விக்னேஷ், அசார், சரவணன், ஸ்டாலின், ஜெயகிருஷ்ணன், நாச்சியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர் குரு ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி