பாபநாசத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ரயில் மறியல்
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்மையில் டாக்டர் அம்பேத்கர் அவர்களை விமர்சித்து கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தஞ்சை மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பாபநாசம் ரயில் நிலையத்தில் தஞ்சை மேற்கு மாவட்ட செயலாளர் தமிழன் தலைமையில் கோயம்புத்தூரில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற ஜனசதாப்தி ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய உள்துறை அமைச்சரை கண்டித்தும், பாரதிய ஜனதா கட்சி மத்திய அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ரயில் மறியல் போராட்டத்தில் பாபநாசம் மேற்கு ஒன்றிய செயலாளர் பசுபதிவளவன், பாபநாசம் கிழக்கு ஒன்றிய செயலாளர் அண்டகுடி ஜெயகுமார், பாபநாசம் நகர செயலாளர் யோகேஸ்வரன், விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் தமிழ்வளவன், நில உரிமை மீட்பு மாநில செயலாளர் வீர வெற்றி வேந்தன், அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர்கள் இனியவன், செந்தில் வளவன், அம்பிகாபதி, அய்யம்பேட்டை நகர செயலாளர் சேக் உசைன், சுவாமிமலை நகர செயலாளர் மகாமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இப்போராட்டத்தில் ஈடுபட்ட 25 பேரை பாபநாசம் போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.