தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே ராஜகிரியில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு கரைமேல் அழகர் அய்யனார் ஆலய மகாகும்பாபிஷேகத்தை முன்னிட்டு கணபதிஹோமம், மகாலட்சுமிஹோமம், நவகிரகஹோமம் உட்பட நான்கு கால யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று மகா பூர்ணாஹுதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருக்கயிலாய வாத்தியங்கள் முழங்க கரைமேல் அழகர், யானை மேல் அழகர், பரிமேல் அழகர் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.