பாபநாசத்தில் காவல்துறையினர் நடத்திய ஆலோசனைக் கூட்டம்

70பார்த்தது
பாபநாசத்தில் காவல்துறையினர் நடத்திய ஆலோசனைக் கூட்டம்
பாபநாசத்தில் விநாயகர் சதுர்த்தி முன்னேற்பாடுகள் குறித்து, காவல்துறையினர் நடத்திய ஆலோசனைக் கூட்டம்.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வரும் செப்டம்பர் 07-ஆம் தேதி அன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகளை நிறுவி, 09-ஆம் தேதி மேற்படி சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைப்பது தொடர்பாக பாபநாசம், அம்மாபேட்டை, மெலட்டூர், அய்யம்பேட்டை, கபிஸ்தலம் ஆகிய காவல் நிலையங்களுக்கு உட்பட்ட விழா கமிட்டி சார்ந்த அனைவரும் வரவழைத்து, அவர்களுக்கு முன் ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பற்றியும் பாபநாசம் துணை காவல் கண்காணிப்பாளர் முருகவேலு தலைமையில் ஆலோசனை கூட்டம் பாபநாசத்தில் அமைந்துள்ள துர்கா மஹால் திருமண மண்டபத்தில் நேற்று(செப்.2) நடைபெற்றது.

300-க்கும் மேற்பட்ட விநாயகர் சதுர்த்தி விழா கமிட்டியை சார்ந்தவர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியை எவ்வாறு நடத்துவது மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன. ஆலோசனை கூட்டத்தில் பாபநாசம், அம்மாபேட்டை, மெலட்டூர், அய்யம்பேட்டை, கபிஸ்தலம் ஆகிய காவல் நிலையங்களை சேர்ந்த ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள், தனிப்பிரிவு போலீசார் உட்பட காவல்துறையை சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி