தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தஞ்சை வடக்கு மாவட்டம் அய்யம்பேட்டை கிளை மற்றும் சக்கராப்பள்ளி கிளை சார்பில் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தவ்ஹீத் ஜமாத் அலுவலகத்திலிருந்து தஞ்சை வடக்கு மாவட்ட துணை செயலாளர் அயூப்கான் தலைமையில் பேரணி புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக போதைக்கு எதிரான கோஷங்கள் இட்டும், போதைக்கு எதிரான வாசகங்கள் பொறிக்கப்பட்ட பலாகைகள் கையில் ஏந்தியும் பேரணி அய்யம்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் முடிவடைந்தது அங்கு
மாவட்ட பேச்சாளர்கள் முகமது கௌஸ், ஷேக்தாவூத் குடியால் ஏற்படும் சீர்கேடு பற்றி உரையாற்றினார்கள்.
பேரணியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அய்யம்பேட்டை சக்கராப்பள்ளி கிளைகளின் பொறுப்பாளர்கள் முகமது ரிஜ்வான், ஜாகிர்உசேன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிறைவாக சக்கராப்பள்ளி கிளை பொருளாளர் ஷேக் ரஹ்மத் ஜான் நன்றி கூறினார்.