
பாபநாசம் கோயில் அறங்காவலராக நியமிக்கப்பட்டவர் முஸ்லிம் அல்ல!
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அமைந்துள்ள ரெகுநாதபுரம் கிராமம் அருள்மிகு ராஜகோபால சுவாமி திருக்கோயில் அறங்காவலராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நர்க்கீஸ்கானின் தந்தை பெயர் தங்கராஜ். அவர் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவர் அல்ல என்றும் மிகச் சிக்கலான நிலையில் பிரசவம் பார்த்த மருத்துவரின் பெயரையே (நர்க்கீஸ்கான்) தனது மகனுக்கு அவர் வைத்துள்ளதாகவும் கோயில் செயல் அலுவலர் விளக்கமளித்துள்ளார் . ஹிந்து கோயில் அறங்காவலராக முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தவறான மற்றும் சமூக விரோத கருத்துகள் பகிரப்பட்டு வந்த நிலையில், இந்த உண்மை தெரியவந்துள்ளது. இதற்கான ஆதாரமாக நர்க்கீஸ்கானின் வகுப்புச் சான்றிதழையும், பள்ளி மாற்றுச் சான்றிதழையும் தமிழ்நாடு அரசு தகவல் சரிபார்ப்பகம் பகிர்ந்துள்ளது.