தஞ்சாவூர் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞர் உயிரிழந்ததை தொடர்ந்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டத்துக்கு உள்பட்ட குணமங்கலம் பெரிய தெருவைச் சேர்ந்தவர் சரவணன் மகன் சுரேந்தர் (18), இவரும். இவரது அத்தை மகன் அஜய்யும். (18) சேர்ந்து சுரேந்தரின் தங்கை சாந்தினியை (15) பள்ளியில் விடுவதற்காக வியாழக்கிழமை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றனர். மோட்டார் சைக்கிளை ஓட்டிய சுரேந்தர் அம்மன்பேட்டை கடை வீதியில் சென்றபோது முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றார். அப்போது, இந்த மோட்டார் சைக்கிளும், எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டன. இதில் சுரேந்தர், அஜய், சாந்தினி, எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த கல்யாணபுரம் பெரியகூரைத் தெருவைச் சேர்ந்த வீரமுத்து மகன் குமார் (35), அம்மன்பேட்டை கடை வீதியில்பூ விற்றுக் கொண்டிருந்த பொன்னாவரையைச் சேர்ந்த தங்கராசு மனைவி காவேரி (60) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர்களில் சுரேந்தர் உயிரிழந்தார். இதனால், கோபமடைந்த சுரேந்தரின் உறவினர்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த காவல்
துறையினர் நிகழ்விடத்துக்கு
சென்று
உறுதியளித்ததையடுத்து மறியல் போராட்டம்
கைவிடப்பட்டது.