மாணவர்கள் கவனத்திற்கு... அரசு பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை

72பார்த்தது
மாணவர்கள் கவனத்திற்கு... அரசு பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை
தஞ்சாவூர் மாவட்டம்
பாபநாசம் அருகே உள்ள ரெகுநாதபுரம் அரசு பாலிடெக்னிக்
கல்லுாரி முதல்வர் லதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பாபநாசம் அருகே ரெகுநாதபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் 2024-25 ம் ஆண்டிற்கான முதலாமாண்டு மற்றும் நேரடி இரண்டாமாண்டு பட்டயப் படிப்பு சேர்க்கை இன்றும், நாளையும் (5 மற்றும் 6 ம் தேதிகளில்) நடக்கிறது. பட்டயப் படிப்பு பயில விரும்பும் மாணவர்கள் உரிய ஆவணங்களுடன் நேரடியாக 5 ம் தேதி மற்றும் 6 ம் தேதிகளில் கல்லுாரி நிர்வாகத்தை தொடர்பு கொள்ளலாம். சேர்க்கையின் போது முதலாமாண்டு எனில் அசல் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், நேரடி இரண்டாமாண்டு எனில் அசல் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், பள்ளி மாற்றுச்சான்றிதழ், அசல் ஜாதி சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் கலர், ஆதார் அட்டை நகல் மாற்றுத்திறனாளி எனில் அதற்கான அடையாள அட்டை நகலுடன் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி