தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, ஆதனூர் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றது. முகாமில் 15-துறை சார்ந்த அதிகாரிகள் மக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றனர். அப்போது அந்த முகாமில் கலந்து கொண்ட கரும்பு விவசாயிகள் 630-நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், எங்களுக்கான நீதி கிடைக்க வேண்டும். மேலும் இந்த முகமானது கண் துடைப்புக்காக நடைபெறுவதாகவும், இதுவரை வேளாண் துறை அமைச்சர் கரும்பு விவசாயிகளின் பிரச்சனைகள் சம்பந்தமாக நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என குற்றம் சுமத்தி, முகாமில் வந்திருந்த அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தாங்கள் சம்பந்தமான துறை இந்த முகாமில் இல்லை என அதிகாரிகள் குறிப்பிட்டதை அடுத்து, அதிகாரிகளுக்கும் கரும்பு விவசாயிகளுக்குமான வாக்குவாதம் அதிகமானது. தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட கரும்பு விவசாயிகளுடன் அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அது ஏற்றுக் கொள்ளாத கரும்பு விவசாயிகள், அந்த பகுதியில் இருந்து கலைந்து சென்றனர்.