தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட சருக்கை, மேலகபிஸ்தலம், ராமானுஜபுரம், கபிஸ்தலம் உள்ளிட்ட ஊராட்சிகளில் அதிமுக கழக உறுப்பினர் உரிமை சீட்டு வழங்கும் நிகழ்ச்சி அம்மா பேரவை மாவட்ட செயலாளர் துரை. சண்முகபிரபு முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தஞ்சை மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ரெத்தினசாமி தலைமை வகித்து அதிமுக கழக உறுப்பினர்களுக்கு புதிய உறுப்பினர் உரிமைச் சீட்டினை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பு அணி மாவட்ட செயலாளர்கள் ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் உட்பட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.