சுவாமிமலை அருகே உள்ள திம்மக்குடி காவிரி ஆற்றில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத வாலிபர் பிணம் கரை ஒதுங்கியது. இதனை அவ்வழியே சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக பாபுராஜபுரம் கிராம நிர்வாக அலுவலர் சுவேதாவிடம் புகார் செய்தனர். கிராம நிர்வாக அலுவலர் சுவேதா கொடுத்த புகாரின் பேரில் சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காவிரி ஆற்றில் கரை ஒதுங்கிய வாலிபரின் பிணத்தை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்கு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார்? எவ்வாறு இறந்தார் யாராவது கொலை செய்து ஆற்றில் போட்டார்களா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.