பாபநாசம் சீனிவாசப் பெருமாள் திருக் கோயிலில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு உறியடி திருவிழா நடந்தது. இதையொட்டி சிறுமிகள் கோலாட்டம் ஆட, நர்த்தன கிருஷ்ணர் உள்பிரகாரத்தில் வலம் வந்தார். இதைத் தொடர்ந்து திருக் கோயில் பிரகாரத்தில் கொடிமரம் அருகே சுவாமி எழுந்தருள, உறியடி, வழுக்கு மரம் ஏறுதல் நிகழ்ச்சி நடந்தது.
இதைத் தொடர்ந்து சுவாமிக்கு நாம கீர்த்தனையுடன் தீபாராதனை, அன்னதானம் நடந்தது. கோயில் பிரகாரத்தில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் கோயில் செயல் அலுவலர் விக்னேஷ், இறைப் பணி மன்ற தலைவர் குமார், பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன் பேருராட்சி கவுன்சிலர் பிரேம்நாத் பைரன், மாவட்ட அறங்கவல குழு உறுப்பினர் செல்வி சரவணன் சமுக ஆர்வர்கள் செந்தில், சீனிவாசன் ஆன்மீகப் பேரவை சீனிவாசன் திருகோவில் பணியாளர்கள் பாலு முருகு பாண்டி சங்கர் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.