பாபநாசத்தில் ஜி. கே. மூப்பனாரின் பிறந்தநாள் விழா

50பார்த்தது
தமிழ் மாநில காங்கிரஸ் நிறுவன தலைவர் ஜி. கே. மூப்பனாரின் 93 வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகள்
பாபநாசத்தில் தாமாகா சார்பில் மாவட்ட தலைவர் சேகர் தலைமையில் வட்டார காங்கிரஸ் தலைவர் சேதுராமன் முன்னிலையில் நடைபெற்றது.
பாபநாசம் கீழ வீதியில்    அலங்கரித்து வைக்கப்பட்ட ஜிகே மூப்பனாரின் திருவுருவ படத்திற்கு தமாகா கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அவரின் பிறந்தநாள் விவசாயிகள் தினமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனையொட்டி விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்புகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கி கொண்டாடினார்கள். இதேபோல் கபிஸ்தலம், அய்யம்பேட்டை, வீரமாங்குடி பகுதிகளிலும் கொண்டாடப்பட்டது.
மதியம் அன்னதானமும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் கட்சியின் நிர்வாகிகள் ஜெயக்குமார்,
விவேக், மாஸ்கோ, சரவணன் காமராஜ், பக்ருதீன், ராதா அமலதாஸ், தனபால், முருகராஜ், ராமராஜ், பஞ்சாபிகேஷன், கிருஷ்ணமூர்த்தி, தமிழழகன், செல்வம், மாதவன், கைலாசம், செந்தில், முருகவேல், செந்தில், ஆறுமுகம், சேகர், மனோகரன், சேதுராமன் உட்பட மாவட்ட, ஒன்றிய, நகர, நிர்வாகிகள் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி