
பாபநாசத்தில் அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் லால்ரின்டிகி பச்சாவ்வை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், அனைத்து அரசு ஊழியர் சங்கத்தினர் மனுக்கள் அளித்துள்ளனர். அப்போது மாவட்ட ஆட்சியர் நீண்ட நேரம் காத்திருப்புக்குப் பிறகு மனுக்களை வாங்கி, மனு கொடுக்க வந்த ஊழியர்களிடம் கடுமையான வார்த்தைகளால் பேசி, அவர்கள் எதிரிலேயே மனுக்களை கிழித்து வீசியதுடன், கோரிக்கைகள் குறித்து பேசிக் கொண்டிருந்த நிர்வாகிகளை, பெரம்பலூர் காவல்துறை கண்காணிப்பாளர் மூலம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதாகவும் அதனைக் கண்டிக்கும் வகையில், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து, ஆட்சியருக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமையில், பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து அரசு ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கத்தின் மத்திய செயற்குழு உறுப்பினர் பிராங்கிளின் பாபநாசம் வட்ட தலைவர் சரவணகுமார் ஊரக வளர்ச்சி துறை வட்டத் தலைவர் ராஜா தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் தமிழ்வாணன் வருவாய் ஆய்வாளர் சுந்தரேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.