வீரபாண்டி - Veerapandi

சேலம் நீதிமன்ற வளாகத்தில் எஸ். ஐ, யை அடிக்க பாய்ந்த கைதி

சேலம் நீதிமன்ற வளாகத்தில் எஸ். ஐ, யை அடிக்க பாய்ந்த கைதி

சேலம் மாவட்டம் மல்லூர் போலீசார் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் நரேஷ் குமார் (32), என்பவரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை சேலம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று வழக்கு விசாரணைக்காக மாவட்ட ஆயுதப்படை எஸ்.ஐ ராமானுஜம் மற்றும் இரண்டு போலீசார் நரேஷ் குமாரை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது மகளிர் நீதிமன்ற வரண்டாவில் காத்திருந்த நரேஷ் குமார் போலீசாரிடம் பீடி, சிகரெட் மற்றும் சாப்பாடு கேட்டுள்ளார். பீடி, சிகரெட் தர முடியாது. சாப்பாடு சிறையில் உனக்கு தயாராக இருக்கிறது என்று தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த நரேஷ்குமார் எஸ்.ஐயை அடிக்க பாய்ந்தார். அப்போது அங்கிருந்த போலீசார் நரேஷ்குமாரை தடுத்தனர். இது குறித்த புகாரின் பேரில் அஸ்தம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர். நீதிமன்ற வளாகத்தில் எஸ்.ஐயை கைதி அடிக்க பாய்ந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வீடியோஸ்


சேலம்