வீரபாண்டி - Veerapandi

உத்தமசோழபுரம் விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் விலை உயர்வு

உத்தமசோழபுரம் விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் விலை உயர்வு

சேலம் அருகே உத்தமசோழபுரத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் மறைமுக ஏலம் தேசிய வேளாண் மின்னணு சந்தை இணையதளம் வாயிலாக நடந்தது. இதில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகளும், சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகளும் கலந்து கொண்டனர். கொப்பரை தேங்காய் கிலோ குறைந்தபட்சமாக ரூ. 79-க்கும், அதிகபட்சமாக ரூ. 130. 50 க்கும் விற்பனையானது. மொத்தம் சுமார் 9. 41 டன் அளவுள்ள 212 மூட்டை கொப்பரை தேங்காய் ரூ. 12 லட்சத்து 56 ஆயிரத்திற்கு ஏலம் போனதாக ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சுப்ரமணி தெரிவித்தார்.

வீடியோஸ்


சேலம்
Sep 26, 2024, 03:09 IST/ஆத்தூர்
ஆத்தூர்

மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்கி விளைச்சல் பாதிப்பு

Sep 26, 2024, 03:09 IST
சேலம் மாவட்டம் ஆத்தூர் சுற்று வட்டார மஞ்சனி, அம்மம்பாளையம், காட்டுக்கேட்டை, இராமநாயக்கன்பாளையம், புதூர் உள்ளிட்ட பகுதியில் சுமார் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் மக்காச்சோள பயிர் செய்து வருகின்றனர். இந்த நிலையில் மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்கி வருவதாகவும், பலமுறை பூச்சிக்கொல்லி மருந்து அடித்தும் அதை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இன்னும் 15 முதல் 20 நாட்களில் விளைச்சலுக்கு வரும் நிலையில் படைப்புழு தாக்குவதாலும் போதிய பருவமழை இல்லாததாலும் விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். பயிரிட்டுள்ள மக்காச்சோள பயிருக்காக ஏக்கருக்கு சுமார் 40 ஆயிரத்துக்கு மேல் செலவு செய்ததாகவும், படைப்புழுவை கட்டுப்படுத்த தமிழக அரசு பூச்சிக்கொல்லி மருந்தை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்றும், விவசாயிகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.