சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே தோக்காரன்காடு பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் இவர் இளம்பிள்ளை அருகே கறிக்கடை பஸ் ஸ்டாப் அருகில் ஜவுளி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று காலை ஜவுளி கடைக்குள் புகுந்த இளைஞர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஈஸ்வரனை சரமாரியாக வெட்டினார். இதனையடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றார். காயமடைந்த ஈஸ்வரன் எடப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து மகுடஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து ஜவுளி கடைக்குள் புகுந்து வெட்டிச்சென்ற ராசிக்கவுண்டனூர் பகுதியைச் சார்ந்த தங்கதுரை என்பவரை தேடி வருகின்றனர்.
உள்ளூர் கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த சம்பவம் நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.