தமிழகத்தில் கூட்டணி இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது

57பார்த்தது
சேலம் அருகே கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் உள்ள பா. ஜனதா கட்சியின் நாடாளுமன்ற தொகுதி அலுவலகத்தில் பா. ஜனதா கட்சியின் மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: - தமிழகம் முழுவதும் ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க பணிகளை துரிதப்படுத்தியுள்ளோம்.
மாவட்டம் வாரியாகவும், சட்டசபை தொகுதிகள் வாரியாகவும் உறுப்பினர்கள் சேர்க்கை பணிகள் நடந்து வருகின்றன. எனவே பா. ஜனதா கட்சியில் உறுப்பினராக சேர விருப்பம் உள்ளவர்கள் சேரலாம்.

தமிழகத்தில் ஆளுகிற கட்சியாக இருந்தாலும், இனி ஆளப்போவதாக கூறிக்கொள்ளும் கட்சியாக இருந்தாலும் அனைத்து பகுதிகளிலும் நாங்கள் வலிமையாக இருக்கிறோம்? என்று சொல்ல முடியாது. 1962-ம் ஆண்டில் தி. மு. க. உருவானதில் இருந்து இதுவரை அவர்கள் கூட்டணி வைக்காமல் ஆட்சிக்கு வரமுடிந்ததா? அல்லது கூட்டணியே வேண்டாம் என்று அவர்களால் தேர்தலை சந்திக்க முடியுமா?.

எப்போது தி. மு. க. கூட்டணி கட்சிகள் வேண்டாம் என்று கூறி தேர்தலை சந்தித்து வெற்றி பெறுகிறதோ? அப்போது அவர்கள் வளர்ந்து விட்டதாக கூறலாம். ஆனால் 1996-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் எந்த கட்சிகளுடன் பா. ஜனதா கூட்டணியை வைக்காமல் ஒரு இடத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. நடிகர் விஜய் அரசியல் வரவு என்பது நல்ல வரவாக இருக்கட்டும். அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி