சேலம் மாவட்டம் திப்பம்பட்டியில் இருந்து சமயபுரம் கோவிலுக்கு செல்வதற்காக சென்னன், அவரது மகள் சுதா (38),
பேரன் விஷ்ணு (12)
ஆகியோர் இருசக்கர வாகனத்தில் வந்து அந்த வாகனத்தை மல்லூரில் உள்ள பைக் ஸ்டாண்டில் நிறுத்துவதற்காக தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் பொழுது சேலத்தில் இருந்து நாமக்கல் உளுத்தம் பருப்பு ஏற்றி வந்த லாரி மோதி சம்பவ இடத்திலேயே மூவரும் இறந்துவிட்டனர். தகவலறிந்த மல்லூர் போலீசார் சடலங்களை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் லாரி டிரைவர் சுந்தரராஜனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.