சேலம் சின்னதிருப்பதி பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியான மணிவண்ணன் என்பவரது வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த செவ்வாய்பேட்டை நிலைய தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் வீட்டில் இருந்த குழந்தைகளின் நோட்டு புத்தகங்கள், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட அரசு ஆவணங்கள், டிவி, பிரிட்ஜ், பீரோ, வாஷிங் மெஷின், புல்லட் பைக் உள்ளிட்ட ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகியது. இந்த தீ விபத்து குறித்து கன்னங்குறிச்சி காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.