
சேலம்: இளைஞர் நாடாளுமன்ற போட்டி; பங்கேற்ற கல்லூரி மாணவிக்கு பாராட்டு
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம், நேரு யுவகேந்திரா, தேசிய நாட்டுநலப்பணி திட்ட அமைப்பு ஆகியவை சார்பில் தேச வளர்ச்சிக்கு பங்களிக்க உதவும் நோக்கில் மாவட்ட, மாநில, தேசிய அளவில் இளைஞர் நாடாளுமன்ற சொற்பொழிவு மற்றும் போட்டிகளை நடத்தி வருகிறது. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான இளைஞர் நாடாளுமன்ற போட்டி நடைபெற்றது. இதில் விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தின் விம்ஸ் வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவி ஜெர்சி கலந்து கொண்டு வெற்றி பெற்றார். மேலும் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் மாநில அளவிலான இளைஞர் நாடாளுமன்ற போட்டியில் பங்கேற்று சிறப்பாக சொற்பொழிவாற்றினார். இதையடுத்து மாணவி ஜெர்சி, கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தனசேகர், அருண், தேசிய மாணவர் படை ஒருங்கிணைப்பாளர் தங்கக்குமரன் ஆகியோரை கல்லூரி முதல்வர் செந்தில்குமார் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.