புரட்டாசி மாதம் நிறைவு: இறைச்சி, மீன் கடைகளில் மக்கள் கூட்டம்

65பார்த்தது
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால் வைணவ வழிபாட்டில் ஈடுபடும் பெரும்பாலான இந்துக்கள் அசைவம் சாப்பிடுவதை தவிர்ப்பார்கள். இதனால் இறைச்சி, மீன் கடைகளில் வியாபாரம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 17-ந் தேதியுடன் புரட்டாசி மாதம் நிறைவடைந்தது. இதையடுத்து விடுமுறை நாளான நேற்று இறைச்சி, மீன் கடைகளில் விற்பனை களைகட்டியது. இதனால் ஆடு, கோழி போன்ற இறைச்சி கடைகளிலும், மீன் கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
ஒரு கிலோ ஆட்டு இறைச்சி ரூ. 700 முதல் ரூ. 750-க்கும், ஒரு கிலோ கோழி இறைச்சி ரூ. 220-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், மீன் வகைகள் ரகத்திற்கு ஏற்றவாறு விற்பனை செய்யப்பட்டது. புரட்டாசி மாதம் நிறைவடைந்ததால் அனைத்து இறைச்சி கடைகளிலும் நேற்று விற்பனை ஜோராக நடந்தது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி