கல்விக்கு அதிபதியான சரஸ்வதி அவதரித்த தினத்தை விஜயதசமியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய தினத்தில் குழந்தைகளுக்கு எழுத்தறிவை கற்றுக் கொடுத்தால் கல்வி மேலோங்கும் மற்றும் வாழ்க்கையில் சிறந்து விளங்குவார்கள் என்பது ஐதீகம் அதன் அடிப்படையில் திருக்கோவில்கள் மற்றும் பள்ளிகளில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதன் அடிப்படையில் சேலம் மாமாங்கம் பகுதியில் அமைந்துள்ள வாகீஸ்வரி வித்யாலயா பள்ளியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக சிறப்பு ஹோமம் நடத்தி வேதங்கள் முழங்க பல்வேறு மூலிகைகளைக் கொண்டு 108 அர்ச்சனைகள் செய்து பூர்ணாஹூதி நடைபெற்றது. இதனையடுத்து மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பள்ளியின் தலைவர் சேகரன் தலைமையில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான குழந்தைகள் பள்ளியின் தலைவர் சேகரன் மடியின் அமர்ந்து நெல் மணியில் முதல் எழுத்தை எழுதி எழுத்தறிவு நிகழ்ச்சி நடைபெற்றது. எழுத்தறிவு நிகழ்ச்சியில் குழந்தைகள் நெல் அரிசியில் ஓம் மற்றும் அ ஆ தமிழ் எழுத்துக்கள் எழுதினர். இந்த நிகழ்ச்சியில் அப்பகுதியில் இருந்து ஏராளமான குழந்தைகள் கலந்து கொண்டனர்.