சேலம் நகரம் - Salem City

சேலம்: தமிழக முதல்வரை கண்டித்து பாமகவினர் ஆர்ப்பாட்டம்

அதானி முறைகேடு விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் தமிழக மின்சாரத்துறை சம்பந்தப்பட்டிருப்பதாக கூறி பல்வேறு அரசியல் கட்சியினர் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.  இந்த நிலையில் பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் அதானி ஊழலில் தமிழக மின்சார துறை குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் ராமதாஸுக்கு பதில் சொல்லும் அவசியம் இல்லை என தெரிவித்திருந்தது பாமக நிர்வாகி மற்றும் தொண்டர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.  இந்த நிலையில் பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸை ஒருமையில் பேசிய தமிழக முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு பாமக மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சாலையில் அமர்ந்தும் மறியல் போராட்டம் நடத்தினர். மறியலில் ஈடுபட்ட மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் உட்பட 95 பேரை போலீசார் கைது செய்தனர்.

வீடியோஸ்


రంగారెడ్డి జిల్లా