தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கத்தின் சேலம் மையம் சார்பில் அகவிலை படியுடன் கூடிய மாதாந்திர ஓய்வூதியத்தை ரூபாய் 6750 வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட தலைவர் வடிவேலு தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அகவிலைபடியுடன் கூடிய மாதாந்திர ஓய்வூதியம் வழங்க வேண்டும், மருத்துவ காப்பீடு, குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஈமச்சடங்கு நிதியாக ரூபாய் 25 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.