சேலம் ராஜகணபதி கோவில் அறங்காவலர் குழு தலைவரும், சோனா கல்வி குழும தலைவருமான வள்ளியப்பா, கோவில் எதிரே மண்டபம் கட்ட ரூ. 24¾ லட்சம் வழங்கினார். கோவில் மண்டபம் கட்ட அரசு அனுமதி பெறப்பட்டது. இதையடுத்து மண்டபம் கட்டுமான பணிக்கான பூமி பூஜை நேற்று கோவில் வளாகத்தில் நடந்தது. இதில் அமைச்சர் ராஜேந்திரன், கோவில் அறங்காவலர் குழு தலைவர் வள்ளியப்பா ஆகியோர் முகூர்த்தக்கால் நட்டு வைத்து கட்டுமான பணியை தொடங்கி வைத்தனர். முன்னதாக ராஜகணபதிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன. இதில் அரசு அலுவலர்கள், அறங்காவலர்கள், கோவில் நிர்வாகிகள், அர்ச்சகர்கள், சோனா கல்வி குழும முதல்வர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.