சேலம், திருச்செங்கோட்டில் நாளை பி. எப். குறைதீர்க்கும் கூட்டம்

58பார்த்தது
சேலம், திருச்செங்கோட்டில் நாளை பி. எப். குறைதீர்க்கும் கூட்டம்
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் மற்றும் தொழிலாளர் அரசு காப்பீடு கழகம் இணைந்து மாவட்ட வாரியாக ஒருங்கிணைந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தை நாளை (புதன்கிழமை) தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்பட 4 மாவட்டங்களில் நடக்கிறது. 

அதன்படி, சேலம் அத்வைத ஆசிரம சாலையில் விநாயகா வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியிலும், நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்திலும், தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் சிப்காட் தொழில் வளாகத்தில் ஓசூர் தொழில் சங்கத்திலும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. 

இந்த கூட்டத்தில் உறுப்பினர் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையிலும் இ.பி.எஃப். அட்வான்சுகள் பற்றிய விழிப்புணர்வும் நடைபெற உள்ளது. முதல் பாதி குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், இரண்டாம் பாதி கூட்டம் மதியம் 2 மணி முதல் 5.45 மணி வரையிலும் நடைபெறும். எனவே இந்த கூட்டத்தில் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் வரம்பிற்குள் உள்பட்ட பணியாளர்கள், ஓய்வூதியம் பெறுவோர், முதலாளிகள், முதன்மை முதலாளிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என சேலம் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் சந்தீப் சிங் நேகி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி