சேலம்: உலக அளவிலான கராத்தே போட்டி.. மாணவ- மாணவிகள் சாதனை

85பார்த்தது
சேலம் வேர்ல்டு சோடாகான் கராத்தே அமைப்பின் சார்பில் உலக அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி கோவாவில் உள்ள போர்சா என்ற இடத்தில் 2 நாட்கள் நடந்தது. இந்த போட்டியில் 24 நாடுகளில் இருந்து கராத்தே வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் சேலம் மாவட்டத்தில் இருந்து குளூனி மெட்ரிக் பள்ளி, ஸ்ரீசாரதா மெட்ரிக் பள்ளி, செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி, குளூனி வித்யா நிகேதன் சி.பி.எஸ்.இ. பள்ளி மற்றும் நிவிஷா ஸ்போர்ட்ஸ் அகாடமி மாணவ-மாணவிகள் 41 பேர் பங்கேற்றனர். தனி கட்டா, குழு கட்டா, தனிநபர் குமித்தே ஆகிய பிரிவுகளில் கலந்து கொண்டு சேலம் மாணவ- மாணவிகள் 34 தங்கம், 28 வெள்ளி, 20 வெண்கலம் ஆகிய பதக்கங்கள் பெற்று இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும், சேலம் மாவட்டத்துக்கும் பெருமை சேர்த்துள்ளனர். 

இந்த சாதனை மாணவ- மாணவிகளுக்கு பாராட்டு விழா சேலம் குளூனி மெட்ரிக் பள்ளியில் நேற்று (நவம்பர் 12) நடந்தது. பள்ளி முதல்வர் ரீனா தலைமை தாங்கி மாணவ- மாணவிகளுக்கு பதக்கங்கள் அணிவித்தும், பரிசு, சான்றிதழ் வழங்கியும் பாராட்டினார். கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது. பெற்றோர் தரப்பில் பயிற்சியாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி