சேலத்தில் அறுபத்து மூவர் திருவீதி உலா நடந்தது

67பார்த்தது
சேலம் அம்மாபேட்டை செங்குந்தர் அருள்மிகு குமரகுரு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் பன்னிரு திருமுறை மன்ற அறக்கட்டளை சார்பில் பதினொன்றாம் ஆண்டாக அறுபத்து மூவர் திருவீதி உலா நடைபெற்றது. அருள்மிகு பொள்ளாப்பிள்ளையார் ,
அம்மையப்பர் சேயிடைச் செல்வர் , , 63 நாயன்மார்கள் , தொகை அடியார்கள் ,
இன்பமணிவாசகர், தெய்வ சேக்கிழார் பெருமான் உள்ளிட்ட நாயன்மார்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் செய்யப்பட்டு. அலங்கரிக்கப்பட்ட மின்விளக்கு பொருத்திய வாகனத்தில் வைக்கப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க சிவனடியார்கள் திருமறைகளை ஓத அம்மாபேட்டையின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றது. வழி நெடுகிலும் பக்தர்கள் தேங்காய் பழம் மாற்றியும் ஊர்வலத்தில் வரும் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கியும் வழிபட்டனர். இந்தத் திருவீதி விழாவில் அப்பகுதி மக்கள் மற்றுமின்றி சுற்றுவட்டாரத்தைச் சார்ந்த ஏராளமான மக்கள் கலந்துகொண்டு நாயன்மார்களை வழிபட்டனர். இந்த விழாவிற்கான ஏற்பாட்டை மன்றத்தின் தலைவர் சிங்காரவேல் துணைத்தலைவர் பிரகாசம் செயலாளர் அருள் பிரகாசம் துணை செயலாளர் விக்னேஷ் பொருளாளர் சிவாஜி மற்றும் ஆலோசாக செந்தில்நாதன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி