சேலம் பள்ளப்பட்டி ஏரி அருகில் நீர்நிலை ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றும் பணி நேற்று நடந்தது. மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறும் போது, பள்ளப்பட்டி ஏரி அருகே நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை இடிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் 5 கோவில்கள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன. அந்த கோவில்களில் உள்ள சாமி சிலைகள் மற்றும் பொருட்களை எடுப்பதற்கு அவகாசம் கேட்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்பிறகு அந்த கோவில்கள் இடித்து அகற்றப்படும். மேலும் அந்த இடத்தில் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யாத வகையில் வேலி அமைக்கப்படும் என்றனர்.
ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றுவதையொட்டி அங்கு போலீஸ் உதவி கமிஷனர் அஸ்வினி, பள்ளப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.