பாஜகவின் இரட்டை பீரங்கிகளை எதிர்க்க வேண்டும் என சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் கூறியுள்ளார். மேலும் அவர், நமது அரசியலமைப்பு சட்டத்தின் அழிவை இலக்காகக் கொண்டுள்ள பாஜகவின் இரட்டை பீரங்கிகள் இந்துத்துவா பெரும்பான்மைவாதமும், கார்ப்பரேட் நலன்களும் ஆகும். இவை இரண்டும் ஒன்றுக்கொன்று இணைந்தவை. அரசியலமைப்பு சட்டத்தின் 75ஆவது ஆண்டில், பாஜகவின் இந்த இரட்டை பீரங்கிகளை எதிர்ப்பதும், தடுப்பதும் நாம் கவனத்தில் கொள்வது அவசியம் என்று கூறியுள்ளார்.