பெங்களூரில் இருந்து திருப்பூருக்கு பருத்தி பேல்களை ஏற்றிக்கொண்டு திருப்பூர் செல்வதற்காக சேலம் வழியாக லாரி வந்து கொண்டிருந்தது. குரங்கு சாவடி பகுதியில் இருந்து லாரி வந்த போது கந்தம்பட்டி மேம்பாலத்தில் ஏறத் தொடங்கியது அப்போது முன்புறம் சென்ற வாகனம் திடீரென பிரேக் போட்டதால் எதிர்பாராத விதமாக பின்னால் சென்ற லாரி ஓட்டுநர் லாரியை நிறுத்த முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக லாரி பாலம் ஓரத்தில் இருந்த சுவற்றின் மீது ஏறி தலை குப்புற கவிழ்ந்தது.
இதனையடுத்து லாரி ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பினார் பாதிக்கப்பட்டவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லாரி திடீரென மேம்பாலத்தில் தலைக்குப்புற கவிழ்ந்ததால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக போக்குவரத்து காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து லாரியை மீட்க முயற்சி மேற்கொண்டனர் சுமார் 3 மணி நேரம் போராட்டத்திற்கு இடையே லாரி மீட்கப்பட்டது இதன் காரணமாக கொண்டலாம்பட்டியில் இருந்து ஏ வி ஆர் ரவுண்டனா வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.