சேலம் ஜான்சன்பேட்டை எல்லை காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

66பார்த்தது
சேலம் டவுன் ஜான்சன்பேட்டை சின்னதிருப்பதி சாலையில் பிரசித்தி பெற்ற எல்லை காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் புதுப்பிக்கப்பட்டு ேநற்று கும்பாபிஷேகம் விழா நடந்தது. கும்பாபிஷேக விழா முகூர்த்தக்கால் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழா நாட்களில் கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், தீபாராதனை நடந்தது.
புனிதநீர் எடுத்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு யாகபூஜையில் வைக்கப்பட்டது. கோபுர கலசங்கள் வைக்கப்பட்டு முதல் கால பூஜை நடந்தது. நேற்று முன்தினம் காலை 2-ம் கால பூஜை, மாலை 3-ம் கால பூஜை நடந்தது. தொடர்ந்து நேற்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. ேகாபுர கலசங்களுக்கு புனிநீர் ஊற்றி கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதற்கு கோவில் தலைவர் சுரேந்தர் தலைமை தாங்கினார். ஜெயராம் பள்ளி உரிமையாளர் மணிகண்டன், கைப்பந்து கழக செயலாளர் சண்முகவேல் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் ெசய்தனர். தொடர்ந்து கோவிலில் சமபந்தி விருந்து நடைபெற்றது. கும்பாபிஷேகம் நிறைவடைந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) முதல் 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடக்கிறது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you