மும்பை - புனே விரைவுச்சாலை அருகே தூய்மைத் தொழிலாளர்கள் சாக்கு பையில் இளம் பெண்ணின் அழுகிய உடல் இருப்பதை கண்டு போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், 30 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடலை மீட்டனர். இதையடுத்து, பெண் கொலை செய்யப்பட்டு 2 சாக்குகளில் அடைக்கப்பட்டு, அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள புதர்களில் வீசப்பட்டுள்ளதாக போலீஸார் தகவல் அளித்துள்ளனர். மேலும், இப்பெண் 2 நாட்களுக்கு முன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.