சேலம் போலீஸ் சரகத்தில் 9 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
சேலம் போலீஸ் சரகத்தில் 9 இன்ஸ்பெக்டர்களை மாற்றம் செய்து சரக டிஐஜி உமா உத்தரவிட்டுள்ளார். சேலம் போலீஸ் சரகத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த இன்ஸ்பெக்டர்களுக்கு புதிய பணியிடமும், சில ஸ்டேஷன்களில் பணியாற்றி வந்த இன்ஸ்பெக்டர்களை வேறு இடத்திற்கும் மாற்றம் செய்து சரக டிஐஜி உமா உத்தரவிட்டுள்ளார். இதன்படி வெவ்வேறு பிரிவுகளில் இருந்து சேலம் சரகத்திற்கு மாறுதலாகி வந்து காத்திருப்போர் பட்டியலில் இருந்த இன்ஸ்பெக்டர் சுரேஷ் தர்மபுரி மாவட்டம் ஏரியூருக்கும், இன்ஸ்பெக்டர் உஷாநந்தினி அரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கும், இன்ஸ்பெக்டர் ரமேஷ் சேலம் மாவட்டம் சங்ககிரிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல், இன்ஸ்பெக்டர் கவிதா தர்மபுரி மாவட்ட கொடுங்குற்ற தடுப்பு பிரிவு-2க்கும், இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வராசன் கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரிக்கும், அங்கு பணியாற்றி வந்த இன்ஸ்பெக்டர் பிரகாஷ் கிருஷ்ணகிரி மதுவிலக்கு பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். தர்மபுரி மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் வளர்மதி சேலம் மாவட்ட கொடுங்குற்ற தடுப்பு பிரிவு-2க்கும், அங்கு பணியாற்றிய இன்ஸ்பெக்டர். நிர்மலா தர்மபுரி மாவட்ட குற்றப்பிரிவுக்கும், தர்மபுரி மாவட்டம் ஏரியூர் இன்ஸ்பெக்டர் யுவராஜன் நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.