தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள புயல் சின்னம் மெதுவாக நகர்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. . நாகைக்கு 520 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு 720 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ள புயல் சின்னம், 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்புயல் சின்னம் நாளை (நவ.27) புயலாக வலுபெற உள்ளது.