சேலத்தில் கடன் தொல்லையால் திமுக நிர்வாகி தற்கொலை
சேலம் அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் விமல்ராஜ். இவர் திமுகவில் தகவல் தொழில்நுட்ப பிரிவில் வடக்கு சட்டமன்ற தொகுதி செயலாளராக உள்ளார். இவர் கடந்த 12ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். விசாரணையில் பலரிடம் ரூபாய் 10 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்ததால் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. சேலத்தில் கந்துவட்டி கொடுமையில் திமுக நிர்வாகி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.