பனியன் ஆலையில் திடீர் தீவிபத்து ரூ1 கோடி பொருட்கள் நாசம்

81பார்த்தது
சேலம் தாதகாப்பட்டி மேட்டு தெரு பகுதியை சேர்ந்தவர் ஜெகதீசன் 43 இவர் தாதகாப்பட்டி சீரங்கன் புது தெரு பகுதியில் மகேந்திரா கலர் பனியன் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்று மாலை நிறுவனத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் தீ மள மளவென பற்றி எரியத் தொடங்கியது. இதை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து அன்னதானப்பட்டி போலீசாருக்கும் செவ்வாய்பேட்டை தீயனைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த செவ்வாய்பேட்டை தீயனைப்பு துறை தீயணைப்பு வீரர்கள் கொழுந்து விட்டு எரிந்த தீயை தண்ணீரை பீச்சி அடித்து அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஐந்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் அருகில் இருந்த வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் இருந்தும் மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடினர் சுமார் 6 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் முதற்கட்ட விசாரணையில் பட்டாசு வெடித்ததில் தீப்பொறி ஆலைக்குள் விழுந்து தீ விபத்து ஏற்பட்டது தெரிந்தது. இந்த விபத்த்தில் ரூ. 1 பொருட்கள் எரிந்து நாசம்ஆகியுள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி