தீபாவளி பண்டிகை முன்னிட்டு ராஜகணபதிக்கு சிறப்பு அலங்காரம்

64பார்த்தது
நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாகவும் உற்சாகமாகவும் கொண்டாடி வருகின்றனர் அதிகாலை மக்கள் வீட்டில் பூஜைகள் செய்து புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து கொண்டாடினர். மேலும் உறவினர்களுக்கு ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு சேலம் சின்ன கடைவீதி பகுதியில் உள்ள ஸ்ரீ ராஜகணபதி திருக்கோவிலில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு ஹோமங்கள் செய்யப்பட்டு பின்னர் ராஜகணபதிக்கு பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து எம்பெருமான் விநாயகப் பெருமானுக்கு புத்தாடை அணிவித்து விநாயகருக்கு சிவாச்சாரியார் வேதங்கள் முழங்க அர்ச்சனைகள் நடைபெற்றன. பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தீபாவளி திருநாளில் விநாயகரை தரிசிக்க அப்பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி