கேரளாவில் ரயில் மோதி உயிரிழந்த குடும்பத்திற்கு நிதியுதவி

75பார்த்தது
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் சொர்னூர் ரயில் நிலையம் பகுதியில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த சேலத்தைச் சேர்ந்த லட்சுமணன், அவரது மனைவி வள்ளி, வள்ளியின் தம்பி மற்றொரு லட்சுமணன், அவரது மனைவி ராணி ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். அப்போது டெல்லியில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி வந்த கேரளா எக்ஸ்பிரஸ் ரயில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த நால்வர் மீதும் மோதியது இதில் நான்கு பேரும் உடல் நசங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை அடுத்து பாலக்காடு அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று நள்ளிரவு சொந்த ஊருக்கு ஆம்புலன்ஸ் மூலம் உடல்கள் கொண்டு வரப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து அவர்களின் உறவினர்கள் நான்கு பேரின் உடல்களை அதிகாலையில் தகனம் செய்தனர். இந்நிலையில் ரயில் மோதி இருந்த நாலு பேரின் குடும்பத்திற்கும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும் நான்கு பேரின் குடும்பத்திற்கும் தலா ரூ. 3 லட்சம் தனது பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அந்த நிதியை சேலம் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் இன்று குடும்பத்தினரிடம் வழங்கினார். அப்போது கலெக்டர் பிருந்தா தேவி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி