சேலம் வீட்டுமனை பட்டா கேட்டு கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

62பார்த்தது
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் பிருந்தாதேவி தலைமை தாங்கினார். அவரிடம் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், வேலைவாய்ப்பு, வங்கிக்கடன்கள், கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக 245 மனுக்கள் கொடுக்கப்பட்டன.
இதேபோல் கலெக்டர் அலுவலக தரைத்தளத்தில் நடந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் 8 மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சிவசுப்பிரமணியன், மாவட்ட வழங்கல் அலுவலர் கணேஷ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முருகன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஓமலூர் அருகே உள்ள மாட்டுக்காரனூர் காட்டுவளவு பகுதியை சேர்ந்த ஏராளமானவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் எட்டிக்குட்டப்பட்டி கிராமம் கல்லாங்குத்து புறம்போக்கு நிலத்தில் இலவச வீட்டுமனைபட்டா வழங்க கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர். இதேபோல் காடையாம்பட்டி அருகே உள்ள குண்டுக்கல் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வீட்டுமனை பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி