சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சாமியாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப். அவரது மகள் சகாயம் மிட்டில்லா, இவர் இன்று சேலம் கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயில் முன்பு கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த போலீசார் இதனை பார்த்து ஓடி வந்து அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து அவரிடம் போலீசார் விசாரணை செய்தனர். அப்போது தனது திருமணத்தை தடுத்து நிறுத்தும் நோக்கில் எங்கள் பகுதியில் உள்ள பால் தேவ், மார்த்தா ரூபி, டேவிட், பெஞ்சமின் உள்ளிட்டோர் எனது தாயின் மீது கஞ்சா விற்பனை செய்வதாக பொய் புகார் கொடுத்தனர். பின்னர் போலீசார் விசாரணையில் எனது தாய் கஞ்சா விற்பனையில் ஈடுபடவில்லை என தெரியவந்து அவரை விடுவித்தனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு அதே போல் எனது தாய் மீது கொலை செய்ய வந்ததாக பொய் புகார் கொடுத்து எனது தாயை கைது செய்ய முயற்சி செய்தனர். இதனால் மணமுடைந்து நான் தற்கொலை செய்யும் எண்ணத்தில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கொசு மருந்து குடித்தேன் எனது இந்த நிலைமைக்கு காரணமானவர்கள் மீது போலீசார் தகுந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.