விழுப்புரம் திண்டிவனம் ரயில் நிலையத்தில், திருச்செந்தூர் எக்ஸ்பிரசில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியர், கைக்குழந்தையுடன் ஏற முயன்றனர். அப்போது எதிர்பாராத விதமாக ரயிலின் அடியில் சிக்கிக்கொண்டனர். உடனே பயணிகள் அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். இதில், மூவரும் சிறு காயங்களுடம் மீடகப்பட்டனர். திண்டிவனம் ரயில் நிலையத்தில் ஏராளமானோர் ரயில்கள் ஏறுவதால், கூடுதல் நேரம் ரயிலை நிறுத்தக்கோரி பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.