சளி, இருமல், தொண்டை கரகரப்பு போன்ற தொந்தரவுகள் வரும்போது, சத்து நிறைந்த சூடான ஆட்டுக்கால் சூப் குடிப்பது நல்லது. கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்றவைகளுடன், கொலாஜன், ப்ரோளின், ஜெலட்டின், ஹியலுரோனிக் அமிலம் என எண்ணற்ற சத்துக்களின் ஆதாரமாக இந்த ஆட்டுக்கால் சூப் உள்ளது. இதனால், உடம்பிலுள்ள கழிவுகள், நச்சுக்கள் நீங்குவதுடன், ரத்த சர்க்கரை அளவையும் சீராக்குகிறது. இதனால், இதயநோய், சர்க்கரை நோய் ஏற்படுவது குறையும்.