சேலம் அம்மாபேட்டையில் கந்த சஷ்டி விழா கொடியேற்றம்

81பார்த்தது
தமிழ் கடவுளான முருக பெருமானுக்கு தமிழ் மாதங்களில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியாக கந்த சஷ்டி பெருவிழா தமிழகம் முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவருகின்ற 7 ம தேதி சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு சேலம் அம்மாபேட்டை குமரகுரு சுப்ரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி சூரசம்கார பெருவிழா கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. அதிகாலை முதல் சிறப்பு ஹோமங்கள் செய்யப்பட்டன தொடர்ந்து செங்குந்தர் குமரகுரு சுப்பிரமணிய சுவாமிக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவர் முருகப்பெருமானுக்கும் வள்ளி தெய்வானை கடவுளுக்கும் பல்வேறு வாசனை மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு வெள்ளி கவச சாத்துப்படி நிகழ்ச்சி நடைபெற்றது தொடர்ந்து. சிவாச்சாரியார்கள் வேதங்கள் முழங்க அர்ச்சனை நடைபெற்றன. பின்னர் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து உற்சவமூர்த்தி என முருகப்பெருமானுக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு மயில் வாகனத்தில் முருகப்பெருமானை அமர்த்தி பூஜைகள் செய்யப்பட்டன. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி