சேலம் நகரம் - Salem City

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி 10 விதமான விநாயகர் சிலை

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சேலம் சீ பேர்ட் ஆசோசியேசன் சார்பில் இந்த ஆண்டு 41 வது ஆண்டு விழாவாக செவ்வாய்பேட்டை அக்ரகாஹாரம் பகுதியில் உள்ள திருமலை கணபதி விநாயகர் கோவிலில் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் பிரளைய காலத்தில் ஆழியில் கடல் மீது ஒரு ஆல் எனும் இலையின் மீது காட்சி தரும் ஆழ்நிலை கணபதி, மும்பையில் மிகவும் பிரசித்தி பெற்ற சித்தி விநாயகர், திருச்சி தெப்பக்குளம் சங்கடஹர சதுர்த்தி விநாயகர், திருச்சி தொட்டியம் கண்திருஷ்டி கணபதி, திருவிடைமருதூர் நர்த்தன விநாயகர், பெண் உருவம் கொண்டு கையில் வீணை இருக்கும் பவானி சங்கமேஸ்வரர் விநாயகர், சென்னை ஆதியந்த பிரபு விநாயகர், நாகேஸ்வரன் துரஹர கணபதி, நாகர்கோவில் நாகராஜகணபதி என மிக முக்கிய விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டிருந்தது. இதனை அப்பகுதியை சேர்ந்த மக்கள் ஆர்வமுடன் தரிசனம் செய்தனர். தொடர்ந்து திருமலை விநாயகர் பல்வேறு விதமான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் திருமலை விநாயகருக்கு தங்க கவசம் சாத்துப்படி நடைபெற்றது. பல்வேறு வாசனை மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பின்னர் வேதங்கள் முழங்க மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

வீடியோஸ்


రంగారెడ్డి జిల్లా