மருத்துவமனைகளில் கூடுதல் பாதுகாப்பு - டிஜிபி ஆணை

83பார்த்தது
மருத்துவமனைகளில் கூடுதல் பாதுகாப்பு - டிஜிபி ஆணை
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட விவகாரத்தைத் தொடர்ந்து, மருத்துவமனைகளில் தாக்குதல் சம்பவம் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் பாதுகாப்பு தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இரவு நேர பாதுகாப்பையும் அதிகரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி