சேலம் கலெக்டர் ஆபீஸில் தீக்குளித்து தற்கொலை முயற்சி

50பார்த்தது
சேலம் அம்மாபேட்டை பச்சப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முனுசாமி 55 இவர் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு உள்ளே வந்தார். அப்போது கையில் ஐந்து லிட்டர் கேனில் வைத்திருந்த மண்ணெண்ணையை எடுத்து தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்து அவர் மீது தண்ணீர் ஊற்றி சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட முனுசாமி கூறுகையில் எனது தந்தை அண்ணாமலையின் பூர்வீக சொத்தான நான்கு வீடுகள் பச்சைப்பட்டி பகுதியில் உள்ளது. நான்கு வீடுகளும் நான்கு மகன்களுக்கு என எழுதிக் கொடுத்து உள்ளார். இந்த நிலையில் எனது கடைசி தம்பி செந்தில் என்பவர் 4 வீட்டு பத்திரத்தை அபகரித்துக் கொண்டு தர மறுக்கிறார்.
இது குறித்து கேட்டதற்கு பத்திரம் தர முடியாது வீட்டை விட்டு வெளியேறு இல்லையென்றால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுக்கிறார். இது குறித்து கிச்சிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை வீடு இல்லாமல் எனது இரண்டு குழந்தைகளுடன் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தார். மாவட்ட நிர்வாகம் இது குறித்து உரிய விசாரணை நடத்தி அபகரித்த பத்திரத்தை மீட்டு தந்து தம்பி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி