சேலம் கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்துறை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க மாநில துணை தலைவர் அர்த்தனாரி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் அருள்பிரகாஷ், பொருளாளர் அகிலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இளநிலை, முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற விதி திருத்த அரசாணையை வெளியிட வேண்டும். பேரிடர் மேலாண்மை பிரிவில் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை உடனே வழங்க வேண்டும். அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினர். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதே கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 26-ந் தேதி பணி புறக்கணிப்பு மற்றும் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படுகிறது என்று சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.